மாரண்டஅள்ளி

Jun 13, 2025, viewer - 2070, வேலு   நிருபர் (தருமபுரி).

மாரண்டஅள்ளியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய நூலகம் - எம்.பி சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய நூலகம் கட்ட ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம் ஒதுக்கீடு செய்திருந்தார்,


நூலக பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நூலகங்கள் திறப்பு விழா முன்னாள் அமைச்சர், கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் வெற்றிவேல், அரூர் எம்.எல்.ஏ சம்பத்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் கேவிரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் வக்கில் செந்தில், கோபால், நகர செயலாளர்கள் கோவிந்தன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 ராஜ்யசபா உறுப்பினர்,
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய நூலகத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். 


அதனை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்து கூறியவர், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நூலகம் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் என தெரிவித்தார்.

 எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் சரவணன், ஒன்றிய துணை செயலாளர் அண்ணாமலை, இளைஞர் அணி ஒன்றிய இணை செயலாளர் வெற்றிவேல், முன்னாள் நகர செயலாளர் சங்கர், விமலன் மாவட்ட பிரதிநிதி ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வகிகள் ராஜா, அசோக், வெங்கடேசன், அனிதா ரமேஷ்குமார், சுரேஷ் உள்ளிட்ட 
மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் கழக தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Ads
Copyright © 2025 AppuTimes. All Rights Reserved. Designed by AppuTimes.