தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கோடியூர் கிராமத்தை சேர்ந்த பாத்திர வியாபாரி சக்திவேல் (41) இவரது மனைவி சத்யா இவர்கள் கோடியூர் கிராமத்தில் உள்ள மேல்மாடியில் தகரசீட் அமைக்கப்பட்ட வீட்டில் குடியிருந்து வருகின்றனர். செவ்வாய்க்கிழமை
காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வியபாரத்திற்க்கு சென்றுள்ளனர்.
மதியம் சுமார் 2 மணிக்கு வீட்டில் இருந்து புகை வந்துள்ளது.
இதனை கண்ட அப்பகுதியினர் இது குறித்து பாலக்கோடு தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டின் பூட்டை உடைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீ மளமளவென பற்றி எரிந்ததில் பீரோவில் இருந்த 1 இலட்த்து 34 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் நான்கரை பவுன் தங்க நகை ,பட்டு புடவை, ஆதார் கார்டு, ரேசன் கார்டு மற்றும் உணவு பண்டங்கள், தட்டுமுட்டு சாமான்கள் என அனைத்து தீயில் கருகி சாம்பலாகின.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.